search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் உண்டியல்"

    • ரிஷிவந்தியம் போலீசார் கெடிலம்கூட்டு்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்து ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் கெடிலம்கூட்டு்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் மாதவன் (வயது 19), ரிஷிவந்தியத்தை சேர்ந்த சாமுண்டி மகன் விஜயகுமார் (19) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரிந்தது. அவர்கள் கா.பாளையம் கிராமத்தில் உள்ள அமைச்சரம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1,122 மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    • காணிக்கை பணம் சுமார் ஆயிரம் ரூபாயை திருடி சென்றிருப்பதாக தகவல்
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளை அடுத்த கக்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 70). இவருக்கு சொந்தமான ஆலமூடு போற்றி குடும்ப கோவில் மேலகக்கோட்டில் உள்ளது.

    சம்பவத்தன்று இரவு பூஜை வழிபாடுகளை முடித்து விட்டு கோவில் நடையை சாத்தி விட்டு ராமதாஸ் சென்றுவிட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது கோவிலின் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் காணிக்கை பணம் சுமார் ஆயிரம் ரூபாயை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து ராமதாஸ் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 17 நிரந்தர உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன.
    • 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுஉள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    இது தவிர இந்த கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் உள்ளது. இந்த உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்பட்டு வருகிறது. நிரந்தர உண்டியல்கள் மட்டும் கடந்த 3 மாதங்களாக திறந்துஎண்ணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 3மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன.

    இதில் உண்டியல் மூலம் ரூ.18 லட்சத்து 39 ஆயிரத்து 163 வசூலாகிஉள்ளது.இது தவிர 11 கிராம் தங்கமும், 193 கிராம் 600 மில்லி கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு பணமும் காணிக்கையாக வசூலாகி உள்ளது.

    • கோவில் பூசாரி சபாபதி பூஜையை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு சென்றார்.
    • கோவிலில் காணிக்கை உண்டியல் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கீழிருப்பு கிராமத்தில் ஊருக்கு நடுவே சித்திவிநாயகர் கோவில் உள்ளது. இங்கு கோவில் பூசாரி சபாபதி பூஜையை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு சென்றார். வழக்கம் போல கோவிலை திறப்பதற்காக இன்று காலை பூசாரி சபாபதி கோவிலுக்கு வந்தார். கோவிலில் காணிக்கை உண்டியல் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இது பற்றி காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கீழிருப்பு கிராமத்தில் தொடர்ந்து கோவில் உண்டியல் உடைப்பு சம்பவம் நடைபெற்று வருவதால்குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் கீழிருப்பு சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசு தரைப்பை சேர்ந்தவர்கள் உண்டியலை திறந்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
    • ஏற்கனவே தாங்கள் போட்டு வைத்திருந்த பூட்டை திருமுருகன் தரப்பினர் உடைத்து விட்டதாக கூறி அவர்களும் ஒரு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள தையூர் என்ற கிராமத்தில் வேம்பியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உண்டியல் உள்ளது. இந்த உண்டியலை நேற்று மதியம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசு தரைப்பை சேர்ந்தவர்கள் உண்டியலை திறந்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர் திருமுருகன் தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் ஏற்கனவே தாங்கள் தான் கோவிலை நிர்வகித்து வந்ததாகவும் அதனால் நாங்கள் உண்டியலை திறந்து எடுத்து சென்றதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது தாங்கள்தான் கோவிலை நிர்வகித்து வருவதாகவும் தாங்கள் போட்ட பூட்டை தென்னரசு தரப்பினர் உடைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் ஏற்கனவே தாங்கள் போட்டு வைத்திருந்த பூட்டை திருமுருகன் தரப்பினர் உடைத்து விட்டதாக கூறி அவர்களும் ஒரு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையிலான போலீசார் மேற்படி கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த தற்போதைய தலைவர் திருமுருகன் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது சம்பந்தமாக விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு திருமுருகன் தரப்பினர் சாலை மறியலை கைவிட்டனர்.இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகிறார்கள். இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குழித்துறை கடந்தன் கோடு இசக்கி அம்மன் கோவிலில் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜை நடைபெறுவது வழக்கம்.
    • ஸ்டீல் காணிக்கைப் பெட்டி உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட குழித்துறை கடந்தன் கோடு இசக்கி அம்மன் கோவிலில் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜை நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல சம்பவத்தன்று பூஜையை முடித்த பின்னர் பூஜாரி கோயில் நடையை அடைத்து விட்டு சென்றுள்ளார். வழக்கம்போல் கோயிலில் பூஜை செய்வதற்காக காலை யில் வந்து பார்த்தபோது கோவிலின் முன் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்டீல் காணிக்கைப் பெட்டி உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.

    இதனையடுத்து கோவில் நிர்வாகிகள் மார்த்தாண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வானூர் அருகே மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை பிடித்து பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்தனர்.
    • உண்டியலின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே நல்லாவூர் புதூர் சாலை ஓரத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. நேற்று நள்ளிரவில் இந்த கோவிலுக்கு மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கோவிலின் வெளியில் உள்ள உண்டியலின் பூட்டை உடைத்து அதில் உள்ள பணத்தை திருடினர். அப்போது உண்டியலின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்தனர். அப்போது கோயிலில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றதை பார்த்தனர்.

    உடனே அவர்கள் அந்த இரண்டு வாலிபர்களை பிடித்து கோவில் அருகில் இருந்த வேப்ப மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர் இது குறித்து கிளியனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த கிளியனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேலுமணி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு வாலிபர்களிடம் விசாரணை செய்தார். விசாரணையில் அவர்கள் திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டை பகுதியைச் சேர்ந்த லட்சுமிபதி (வயது 27) ரமேஷ் (22) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் இரண்டு பேர் மீதும் பல்வேறு கோவிலில் திருட்டில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களது மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • மதுரை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று இரவு மர்ம மனிதர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

    பின்னர் கோவிலில் இருந்த 2 உண்டியல்களை உடைத்து வெளியே தூக்கிச்சென்று பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப் இன்ஸ்பெக்டர் ஜெயா கஜேந்திரன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • புவனகிரி அருகே கோவில் உண்டியலை கொள்ளையர்கள் தூக்கி சென்றனர்.
    • இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவன கிரியில் குறிஞ்சிப்பாடி சாலையான வயல்வெளி பகுதியில் பிரசித்திபெற்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இன்று காலை மர்ம நபர்கள் சென்றனர். கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து தூக்கி சென்றனர். பின்னர் அதனை அங்குள்ள வயல் வெளியில் வீசி சென்று தலைமறை வானார்கள். இன்று காலை பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவில் உண்டி யல் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதுகுறத்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீ சார் வழக்குபதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்த கும்பலை தேடி வருகிறார்கள்.

    ×